Kashi Tamil Sangamam 2025 Registration Link : மத்திய அரசின் “காசி தமிழ் சங்கமம்” நிகழ்ச்சியில் மூன்றாம் ஆண்டு நிகழ்ச்சி உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 15 முதல் 24-ம் தேதி வரை தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை ஐஐடி செய்து வருகிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்க ஆன்லைன் இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டிற்கும் வாரணாசிக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்தும் வகையில் பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 24-ம் தேதி வரை காசி தமிழ் சங்கமம் நடைபெறுகிறது. இதில் 5 பிரிவுகளை சேர்ந்த 1000 பேர் கலந்துகொள்ள உள்ளனர். பண்டைய இந்தியாவின் இரண்டு முக்கிய கற்றல் மற்றும் கலாச்சார மையங்களுக்கு இடையிலான கலாச்சார தொடர்புகளை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்ற நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது
தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பம் வரவேற்பு
தமிழ்நாட்டில் இருந்து 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு சுமார் 1000 பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், கைவினை கலைஞர்கள், தொழில் வல்லுநர்கள், தொழில்முனைவோர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களில் இருந்து 200 மாணவர்கள் கொண்ட குழுவினர் இந்நிகழ்வில் பங்கேற்று வரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தி போன்ற இடங்களை பார்வையிடும் வாய்ப்பை பெறுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் http://kashitamil.iitm.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்
- பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும் மகா கும்பமேளாவுடன் இணைந்து இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
- இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுபவர்கள் மகா கும்பமேளாவில் புனித நீராடல் செய்து, அயோத்தி ராமர் கோயில் தரிசனம் செய்யலாம்.
- இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக அகத்தியரின் சித்த மருத்துவ முறை, தமிழ் இலக்கிய, கலாச்சார ஒற்றுமைக்கான பங்களிப்பு ஆகியவற்றை எடுத்துரைக்கப்படும்.
- அகத்தியரின் சிறப்புகள், சுகாதாரம், தத்துவம், அறிவியல், மொழியியல், இலக்கியம், அரசியல், கலாச்சாரம், கலை ஆகியவற்றை குறித்த கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
.jpg)
0 Comments