இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தவுடன் ஹெல்மெட் அணிய வேண்டும் மாநகர போலீஸ் கமிஷனர் அறிவுரை

Follow Us

இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தவுடன் ஹெல்மெட் அணிய வேண்டும் மாநகர போலீஸ் கமிஷனர் அறிவுரை

 கோவை, ஜன. 28: இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தவுடன் ஹெல்மெட் அணிய வேண்டும் என பொதுமக்களுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் அறிவுரை வழங்கினார். கோவை மாநகர போக்குவரத்து போலீசார் மற்றும் லாரி அசோசியேசன் சார்பில் 36வது சாலைப் பாதுகாப்பு மாத விழா கோவை அவிநாசி ரோடு லட்சுமி மில்ஸ் பகுதியில் நடந்தது. இதில் போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கலந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தவுடன் ஹெல்மெட் அணிய வேண்டும். அதேபோல நான்கு சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தவுடன் சீட் பெல்ட் அணிய வேண்டும். சாலையில் செல்வோர் மிகவும் கவனமாக சாலை விதிமுறைகளுக்கு பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும். பொதுமக்கள் எப்போதும் அக்கறையோடு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments