தர்மபுரி, ஜன.29: தர்மபுரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் வீட்டுப்பணியில் ஈடுபடும் பணியாளர்களை, தமிழ்நாடு வீட்டுப்பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்வதற்கு ஏதுவாக, தர்மபுரி தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இத்தொழில்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், கைபேசி எண், ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்து, அரசின் நலத்திட்டங்களை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments