சென்னை: தமிழ்நாடு அரசு பொதுமக்கள் நிலம் தொடர்பான மோசடிகளில் சிக்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காகவே தனியாக https://eservices.tn.gov.in/eservicesnew/ index.html என்ற இணையதளத்தை நடத்தி வருகிறது. இந்த இணையதளத்தில் பல்வேறு அடிப்படை விஷயங்களை அறிந்து கொள்ள முடியும். அதில் இனி பட்டாவுடன், வரைபடத்தையும் ஒரு சேர பெறுவதற்கான திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த போகிறது
பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் சனி மற்றும் செவ்வாய் ஆகிய 2 கிரகங்களின் திசைகள், புக்திகள் அந்த ஜாதகருக்கு பாதகமான பலன்களை தருகின்ற நிலையில் இருந்தால், அவரது வீடு மற்றும் பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர் கொள்ளும் சூழல் உருவாகும் என்கிறார்கள்
ஆவணங்கள்: 3ம் அதிபதி மற்றும் மூன்றில் நின்ற கிரகங்களின் வலிமையை பொறுத்தே ஒருவருக்கு ஆவணங்கள் தொடர்பான சாதக பாதகங்கள் ஏற்படுகின்றன.. ஒருவருக்கு ஆவணங்கள் தொடர்பான அனைத்தும் சுமூகமாக நடக்க வேண்டுமானால், புதனும் மூன்றாமிடமும் வலிமை பெற வேண்டும். மூன்றாமிடமும் புதனும் வலிமை குறைந்து ராகு/கேதுக்களின் சம்பந்தம் பெறும்போது ஆவணங்களால் ஏற்படும் அசுப பலன்கள், மன உளைச்சலும் அதிகமாகிவிடுகின்றன. இதற்கெல்லாம் சட்டரீதியாக தீர்வு உண்டு. அதேபோல, உரிய நியாயங்கள் கிடைக்கவில்லை என்று கருதும் நபர்கள். சில பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்வதால் சொத்துக்களில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சனைகள் தீர்ந்து, அதை நல்ல முறையில் அனுபவிக்க வழி உண்டாகும் எனறு தாந்திரீக சாஸ்திரம் தெரிவிக்கின்றது. அந்தவகையில், பூர்வீக சொத்துக்களை பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள், ஒவ்வொரு ஞாயிற்றுகிழமைகளில் காலை உணவு சாப்பிடுவதற்கு முன்பு, சிற்றிதளவு அரிசியையும், வெல்லத்தையும் கலந்து, கன்று போட்ட பசு மாட்டுக்கு உணவாக, கையாலேயே ஊட்டிவிட வேண்டும்
ஆதரவற்ற நபர்கள்: அதேபோல, வெள்ளிக்கிழமைகளில் சாலையோரங்களில் இருக்கின்ற வயதான, ஆதரவற்ற நபர்களுக்கு ஒருவேளை உணவாவது வழங்கி வந்தாலும் பூர்வீக சொத்துக்களிலுள்ள பிரச்சினைகள் சுமூகமாக நீங்கும்.. அதேபோல, தினமும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையான பிரதோஷ வேளையில் ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வழிபட்டு வந்தால் சட்ட சிக்கல் விரைவில் தீரும். அதேபோல, செவ்வாய்க்கிழமைகளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையான செவ்வாய் ஓரையில் வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை அணிவித்து (27 எண்ணம்) 9 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி 48 வாரம் வழிபட்டு வந்தாலும் பலன் கிடைக்கும். ஒருவேளை, பலவருட காலம் இழுபறியாக சொத்து பிரச்சனை இருந்தால், நவராத்திரியின் முதல் நாளிலிருந்து, 9 நாட்களுக்கும் துர்கை அம்மனை வழிபடலாம்.
தந்தை வழி சொத்து: தந்தை வழி சொத்தில் இருக்கக்கூடிய தடைகளும், சிக்கல்களும் நீங்க வேண்டுமானால், ஞாயிற்றுக்கிழமையில் முருகப்பெருமான் கோயிலுக்கு சென்று, செவ்வரளி பூக்களால் மாலை தொடுத்து அணிவித்து 2 நெய் தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்து வந்தால், விரைவில் சொத்து பிரச்சனை தீரும். தாய் வழி சொத்தில் பிரச்சனைகள் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள், கடற்கரையோரத்தில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு அம்மன் கோயிலுக்கு சென்று, செவ்வரளி மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம். சொத்துக்களை இழந்தோரும், தங்களுக்கு வர வேண்டிய நியாயமான சொத்துக்கள் வராமல் தவிப்பவர்களும், திரும்ப கிடைக்கும் என நினைத்து கொடுத்த பணத்தை இழந்தோரும், தங்களின் நிலை மாற வேண்டுமானால், தொடர்ந்து 27 பஞ்சமிகள், மாலை வேளையில் சிவன் சன்னதியில் சிகப்பு திரி கொண்டு மண் அகலில் இலுப்பெண்ணெய் தீபம் 9 ஏற்றி மனமுருகி வேண்டி வர வேண்டும். இந்த பரிகாரம் முடிவதற்குள் பலன் கை மேல் கிடைக்குமாம்.. ஆனால், இந்த பரிகாரம் செய்யும் நாள் முட்டை உட்பட அசைவ உணவை தவிர்க்க வேண்டும்
பத்திரங்கள்: பத்திரங்கள் சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்டு அதன் மூலமாக சொத்துக்கள் கிடைக்கவில்லையானால், வசித்துவரும் ஊரில் இருக்கக்கூடிய பச்சை அம்மன் கோவிலுக்கு சென்று, அம்மனுக்கு பச்சை நிற ஆடையை சாற்றி, பத்திர நகலை அம்மனின் காலடியில் வைத்து மனதார வழிபட வேண்டும். இதனால், பத்திரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்

0 Comments