சென்னை: நிலங்களில் எத்தனையோ வகைகள் உள்ளன.. இதில் மேய்க்கால் புறம்போக்கு என்றால் என்ன தெரியுமா? இந்த வகை நிலத்தின் முக்கியத்துவம், பயன்பாடுகள் என்ன? இந்த மேய்ச்சல் நிலங்களுக்கு பட்டா கோர முடியுமா? சுருக்கமாக பார்ப்போம்.
தமிழ்நாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்களில் பல வகைகள் உள்ளன.. அவை, மேய்ச்சல் நிலங்கள், தரிசு நிலங்கள், கடற்கரை, ஆறு, ஓடை, வாய்க்கால் போன்ற நீர்நிலைகள், சாலை, இடுகாடு, நத்தம் புறம்போக்கு நிலம் போன்றவற்றை சொல்லலாம்.
இதில் மேய்க்கால் நிலம் என்பது, கிராமத்தில் ஆடு மாடுகளின் மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட நிலமாகும்... எனவே, எப்போதுமே மழைக்காலங்களில் மேய்ச்சல் நிலங்கள் பசுமையாகவும், கோடைக்காலங்களில் மேய்ச்சல் நிலங்கள் வறண்டும் காணப்படும். மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகளின் கழிவுகளை சேர்த்து, பிறகு, அதை வயல்களில் உரமாக பயன்படுத்துவார்கள்.. பனை மரங்கள்: இந்த மேய்ச்சல் நிலங்கள்தான், கால்நடைகளின் முக்கிய மேய்ச்சல் ஆதாரமாகும்.. இந்த மேய்க்கால் நிலங்களில், குடை வேல், கருவேலம், விருவெட்டு, காரை, தொரட்டி, சிறுகுமிழ் மரங்கள் காணப்படும்.. சில இடங்களில் பனை மரங்களையும் காண முடியும்.. சங்க காலத்தில், இந்த நிலத்தைதான், "முல்லைத் திணை என்று அழைத்தார்கள். இந்த நிலத்தை ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலம் என்பார்கள். அதாவது, குளம், குட்டை, வாய்க்கால், ஏரி, கண்மாய் போன்ற நீர் வழி தடங்களில் இருக்கக்கூடிய இடத்துக்குதான் மேய்க்கால் நிலம் என்பார்கள்.. இதனை பொதுமக்கள் உரிமை கொண்டாட முடியாது.
0 Comments