காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 திருவாரூர், ஜன.30: காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் இருந்து வரும் 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், காலம் முறை ஊதியம் மற்றும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்,10, 20 மற்றும் 30 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு சிறப்பு தேக்க நிலை ஊதியம் வழங்கிட வேண்டும், ஆண் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும்,



உதவியாளர்களுக்கு சமையலர் பதவி உயர்வும், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு அமைப்பாளர் பதவி உயர்வும் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர்மாவட்டத் துணைத் தலைவர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Post a Comment

0 Comments