பெண்களுக்கு எதிரான குற்றம்: கடும் தண்டனை வழங்கும் சட்டம் அமல்!

Follow Us

பெண்களுக்கு எதிரான குற்றம்: கடும் தண்டனை வழங்கும் சட்டம் அமல்!

 பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டம் ஜனவரி 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. 




கடந்த 10 ஆம் ஆம் தேதி பேரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்த மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். 

அதில், தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்த புதிய சட்டத்திருத்த மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து சட்டத்திருத்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 



இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் சட்டத்திருந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை விதிக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து சட்டப்பேரவையில் நிறைவேறிய சட்ட திருத்தம், ஆளுநரின் ஒப்புதலை அடுத்து அரசிதழில் வெளியானது. 

அதில், கடந்த ஜனவரி 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் முறையாக இந்தக் குற்றத்தில் ஈடுபடுபவருக்கு 5 ஆண்டுகள் சிறையும் ரூ.1 லட்சம் அபராதமும், 2-வது முறை தண்டனையாக 10 ஆண்டுகள் சிறை, ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments