NHAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 | NHAI Recruitment 2023

Follow Us

NHAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 | NHAI Recruitment 2023

 

NHAI நிறுவனத்தில் காத்திருக்கும் General Manager வேலை – ரூ.67,000/- மாத ஊதியம் || விண்ணப்பிக்க விரையுங்கள்!

General Manager (Finance) பணிக்கென இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Promotion / Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

NHAI காலியிடங்கள்:

NHAI நிறுவனத்தில் காலியாக உள்ள General Manager (Finance) பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

General Manager பணிக்கான தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் B.Com, BCA, ICAI, ICWAI, MBA பட்டம் பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
  • அரசு நிறுவனங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ்வரும் பதவிகளில் 05 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களும் General Manager (Finance) பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
NHAI வயது வரம்பு:

General Manager (Finance) பணிக்கு 56 வயதுக்கு கீழுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

General Manager ஊதியம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Level – 13 படி, குறைந்தது ரூ.1,23,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,15,900/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

NHAI தேர்வு செய்யும் விதம்:

இந்த NHAI நிறுவன பணிக்கு பொருத்தமான நபர்கள் Promotion / Deputation விதிமுறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

General Manager விண்ணப்பிக்கும் விதம்:
  • விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 12.01.2024 அன்றுக்குள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 12.02.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.
Download Notification Link
Online Application Link

Post a Comment

0 Comments