அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2023 – தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம் மற்றும் நகர், அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு இந்து மதத்தை சார்ந்த நபர்களிடமிருந்து 16.08.2023 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் காலிப்பணியிடங்கள்:
- இளநிலை உதவியாளர் – 2 பணியிடங்கள்
- இளநிலை பொறியாளர் – 1 பணியிடம்
- சீட்டு விற்பனையாளர் – 2 பணியிடங்கள்
- பிளம்பர் – 1 பணியிடம்
- காவலர் – 3 பணியிடங்கள்
- துப்புரவாளர் – 10 பணியிடங்கள்
- தொழில்நுட்ப உதவியாளர் – 1 பணியிடம்
TNHRCE வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 01. 07. 2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
- இளநிலை உதவியாளர் – கட்டிடப் பொறியியலில் பட்டயபடிப்பு
- இளநிலை பொறியாளர் – பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
- சீட்டு விற்பனையாளர் – பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
- பிளம்பர் – அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் குழாய் தொழில்/ குழாய் பணியர் பாடப்பிரிவில் வழங்கப்படும் தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய பிரிவில் ஐந்தாண்டுகள் அல்லது இரண்டாண்டுகள் தொழில் பழகுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
- காவலர் – தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- துப்புரவாளர் – தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- தொழில்நுட்ப உதவியாளர் – கட்டிடப் பொறியியலில் பட்டயபடிப்பு
சம்பள விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.10,000/- முதல் ரூ.1,13,500/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்கள் திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை ரூ.100, செலுத்தி நேரிலோ அல்லது என்கிற இணையதள முகவரியில் அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் என்ற பெயரில் உள்ள பக்கத்தில் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து 16.08.2023 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Comments