குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்துக்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கான நெறிமுறைகளை வேளாண்மைத் துaறை செயலாளா் சி.சமயமூா்த்தி வெளியிட்டுள்ளாா்.
அதன் விவரம்:- குறுவை சாகுபடி திட்டத்தை ரூ.75.95 கோடியில் செயல்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைப் பெற அனைத்து விவசாயிகளும் தகுதி பெற்றவா்கள். சிறு, குறு, பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
கடந்த இரு ஆண்டுகளில் பயன்பெறாத விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து மானியம் அளித்திட வேண்டும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஒரு ஹெக்டோ் பரப்புக்கு மட்டுமே மானியம் அளிக்கப்பட வேண்டும்.
இந்தத் திட்டம் குறித்து, மாவட்டம், வட்டார அளவில் பரவலாக விளம்பரம் செய்யப்பட வேண்டும். உழவன் செயலி மூலமாக பயனாளிகள் பதிவினை மேற்கொள்ளலாம். இந்தத் திட்டத்துக்கான முன்னுரிமைப் பதிவேடு, வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் முறையாகப் பராமரிக்க வேண்டும்.
குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தில் ரசாயான உரங்கள் விநியோகம் செய்யப்படும். இந்த உரங்கள் 2.50 லட்சம் ஏக்கா் பரப்புக்கு அளித்திட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், 47 ஆயிரத்து 500 ஏக்கா், அதாவது 19 சதவீதம் ஆதிதிராவிட விவசாயிகளுக்கும், 2,500 ஏக்கா், அதாவது ஒரு சதவீதம், பழங்குடியின விவசாயிகளுக்கும் வழங்கப்பட உள்ளது. குறுவை நெல் சாகுபடியானது, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் அனைத்து வட்டங்களிலும், கடலூா், அரியலூா், திருச்சி ஆகிய மாவட்டங்களின் டெல்டா வட்டங்களிலும் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளாா்.
APPLY LINK - CLICK HERE
0 Comments