தமிழகத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு மாதம் ரூ.13500/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு மாதம் ரூ.13500/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பல் நோக்கு மருத்துவமனை பணியாளர், ஊர்தி ஓட்டுநர் மற்றும் துப்பரவாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 07-04-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட சுகாதார சங்க காலிப்பணியிடங்கள்:
  • பல் நோக்கு மருத்துவமனை பணியாளர் – 02 பணியிடங்கள்
  • ஊர்தி ஓட்டுநர் – 01 பணியிடம்
  • துப்பரவாளர் – 01 பணியிடம்
DHS விருதுநகர் பணிக்கான வயது வரம்பு:

மாவட்ட சுகாதார சங்கம் விருதுநகர் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 40ற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:
  • பல் நோக்கு மருத்துவமனை பணியாளர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஊர்தி ஓட்டுநர் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி (ம) கனரக வாகன ஓட்டுநர் உரிமம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
  • துப்பரவாளர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
  • பல் நோக்கு மருத்துவமனை பணியாளர் – ரூ.8500/-
  • ஊர்தி ஓட்டுநர் – ரூ.13500/-
  • துப்பரவாளர் – ரூ.6500/-
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் உரிய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை நிர்வாகச் செயலர், மாவட்ட சுகாதாரச் சங்கம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர், ஆட்சியர் வளாகம், விருதுநகர்-626001 என்ற முகவரிக்கு 07-ஏப்-2023 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments