வாரிசு சான்றிதழ் என்பது, மறைந்த குடும்ப உறுப்பினரின் சொத்துக்கள் அல்லது நிலுவைத் தொகைகள் மீதான உரிமையை நிலைநாட்ட வாழ்ந்து கொண்டிருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவைப்படும் ஒரு சட்டப்பூர்வமான ஆவணமாகும். வாரிசு சான்றிதழ் அல்லது சட்டப்பூர்வ சான்றிதழில் (ஆங்கிலத்தில்- லீகல் ஹேர்) இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசு(களின்) பெயர்(கள்) மற்றும் இறந்தவருடனான அவர்களது உறவு ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும் . எனவே, இது முறையான வாரிசைத் அடையாளம் காண உதவுகிறது.
வாரிசு சான்றிதழ் என்பது ஒரு நபரின் திடீர் மறைவின் போது ஒரு சொத்து அல்லது சொத்தின் உரிமைக்கான பொருத்தமான வாரிசை தீர்மானிக்கிறது. மேலும் சொத்து ஒப்படைக்கப்பட வேண்டிய தகுதியுள்ள உரிமையாளர்களை அடையாளம் காண உரிய வாரிசுகளிடம் முறையான விசாரணை நடத்தி சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழை வட்டாட்சியர் வழங்குவார்
சட்டபூர்வ வாரிசு சான்றிதழின் முக்கியத்துவம் :
ஒரு சொத்தின் பதிவுபெற்ற உரிமையாளர் ஒருவரின் மறைவுக்குப் பிறகு, அந்த இறந்த நபரின் உடைமைகள் அல்லது சொத்துக்களின் உரிமைஉடைமையைக் கோருவதற்கு ஒரு குடும்ப உறுப்பினர் (மனைவி, குழந்தை அல்லது பெற்றோர்) அவர்/அவள் அவரின் முறையான வாரிசு என்பதை நிரூபிக்க வேண்டும். நடைமுறையில் சொத்துக்கள் மீது பொய்யாக உரிமை கோரும் வழக்குகள் ஏற்கனவே உள்ளன. ஆகவே , வாரிசு சான்றிதழைப் பெறுவது இன்றியமையாததாகிறது. தகுதியான வாரிசு(கள்) குறித்த முறையான விசாரணைக்குப் பிறகு அரசு அதிகாரிகளால் அந்த ஆவணம் வழங்கப்படுகிறது.
இறந்தவரின் அசையும்/அசையா சொத்துக்கள் மற்றும் உடைமைகளின் உரிமை மாற்றம் செய்வதோடு கூடுதலாக இதர, பல்வேறு நோக்கங்களுக்காக வரிச் சான்றிதழ் தேவைப்படுகிறது. சொத்துப் பதிவின் போது, வாங்குபவர், வாங்கப்படும் சொத்தின் உரிமையைக் கண்டறிய சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழைக் கேட்பார். சில சந்தர்ப்பங்களில், ஒரு சொத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சட்டப்பூர்வ வாரிசுகள் இருந்தால், அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளிடமிருந்தும் கையொப்பம் பெற வேண்டிய அவசியம் இருப்பதால், அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளும் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும். மூதாதையர் சொத்தை வாங்கும் போது அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் சம்மதத்தைப் பெறாதது எதிர்காலத்தில் வழக்குகளுக்கு வழிவகுக்கும்.
எதற்கெல்லாம் வாரிசு சான்றிதழ் தேவைப்படும்
காப்பீட்டுக் திட்டம்,வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடைத் தொகை ஆகியவற்றின் பலன்களைப் பெறுதல் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான இசைவாணை பெற இறந்தவர் சொத்தை உரிமை மாற்றம் செய்தல் அல்லது மூதாதையர் சொத்துக்களை வாங்குவது போன்றவற்றுக்கு சம்பள நிலுவைத் தொகைகளைப் பெறுவதற்கு (மாநில/மத்திய அரசு ஊழியர்களுக்கு) கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பைப் பெற வைப்பு நிதி அல்லது முதலீடுகளின் உரிமை மாற்றம் செய்ய.
யார் யாரெல்லாம் வாரிசு சான்றிதழ் பெறலாம்?
பின்வரும் நபர்கள் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழைப் பெற தகுதியுடையவர்:
1.இறந்தவரின் மனைவி.
2.இறந்தவரின் குழந்தை.
3.இறந்தவரின் தந்தை அல்லது தாய்.
4.இறந்தவரின் உடன்பிறப்பு.
தேவையான ஆவணங்கள் என்னென்ன?
1.ஒரு சுய உறுதிமொழிப் பத்திரம்.
2.விண்ணப்பதாரரின் அடையாளச் சான்று.
3.அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் முகவரிச் சான்று.
4.அனைத்து சட்டப்பூர்வ வாரிசுகளின் பிறந்த தேதி சான்று.
5.இறந்த நபரின் இறப்பு சான்றிதழ்.
6.இறந்த நேரடி சட்ட வாரிசின் இறப்புச் சான்றிதழ்.
7.இறந்தவரின் இருப்பிடச் சான்று.
சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் அல்லது வாரிசுரிமை சான்றிதழுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
தமிழகத்தில் வாரிசு சான்றிதழுக்கான அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்., பொதுமக்களின் நலன்களை மையப்படுத்திய சேவைகளை பொது சேவை மையங்கள் (CSCs) மூலம் ஆன்லைனில் அணுக தமிழ்நாடு அரசு இ-சேவை வசதியை வழங்குகிறது.
சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழைப் பெறுவும் மற்றும் அதைப் பதிவிறக்கம் செய்வதற்கும் படிப்படியான நடைமுறைகளின் வழிகாட்டி இங்கே உள்ளது.
அதிகாரப்பூர்வ தமிழ்நாடு இ-சேவை போர்டல் (TN e-Sevai) போர்ட்டலுக்குச் உங்கள் அறிமுக ஆவணங்களோடு சென்று புகுபதிகை செய்யுங்கள் .முதல் முறை பயனர்கள் இணையதளத்தில் பதிவு செய்வது அவசியம். முகப்புப் பக்கத்தின் வலது புறத்தில் 'புதிய பயனரா? இங்கே பதிவு செய்யவும்' என்ற விருப்பத்தேர்வில் கிளிக் செய்யுங்கள்.
அதற்கு அடுத்த பக்கத்தில் முழுப்பெயர், தாலுக்கா, மாவட்டம், மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை வழங்கவும். கேப்ட்சாவை உள்ளிட்டு 'இணை' என்பதில் கிளிக் செய்யவும்.
உங்கள் மொபைல் எண்ணில் நீங்கள் பெறும் OTP ஐ (ஒரு முறை கடவுச்சொல்) உள்ளிடவும்.
வெற்றிகரமான சரிபார்ப்புக்குப் பிறகு, 'புகுபதிகை' என்பதில் கிளிக் செய்து, உங்கள் புகுபதிகை அறிமுக ஆவணங்களை உள்ளிடவும். பதிவு செய்யப்பட்ட தங்களின் மொபைல் எண்ணைக் கொண்டும் பயனர்கள் புகுபதிகை செய்யலாம் .
இடது புற பலகத்தில் உள்ள 'சேவை வாரியாக' என்ற விருப்பத்தேர்வில் கிளிக் செய்யவும். பட்டியலில் இருக்கக்கூடிய ஆவணங்களில், ரெவ் 114 (REV-114) சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் மீது கிளிக் செய்யவும்.
ஒரு புதிய விண்டோ தோன்றும். அந்தப் பக்கத்தின் கீழே சென்று, 'தொடரவும்' என்பதில் கிளிக் செய்யவும்.
பெயர், CAN எண், தந்தையின் பெயர், மின்னஞ்சல் ஐடி, ஆதார் எண், மொபைல் எண் மற்றும் பிறந்த தேதி போன்ற சம்பந்தப்பட்ட விவரங்களைச் அடுத்த பக்கத்தில், சமர்ப்பிக்கவும். 'தேடு' என்பதில் கிளிக் செய்யவும். CAN எண் இல்லாத பயனர்கள் 'CAN பதிவு செய்ய' என்ற இணைப்பைக் கிளிக் செய்து பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
இப்போது நீங்கள் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் படிவத்தை பார்க்கலாம். விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களைப் பதிவேற்றவும். ஆவணங்களைப் பதிவேற்றிய பிறகு, இணையம் மூலமாக உரிய கட்டணத்தை செலுத்துங்கள்.
கட்டணம் செலுத்துவது வெற்றிகரமாக நிறைவேறியவுடன் வாரிசு சான்றிதழ் விண்ணப்பத்திற்கான ஒரு ஒப்புகை ரசீதை பதிவிறக்கம் செய்து எதிர்காலத்தில் பயன்படுத்துவதற்காக சேமித்து வைக்கலாம்.
வாரிசு சான்றிதழ் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை சரிபார்க்கப் பயன்படுத்துவதற்கான விண்ணப்ப எண் ரசீதில் கொடுக்கப்பட்டிருக்கும்.
நீங்கள் பதிவு செய்த விபரங்களை சரிபார்த்த பிறகு உங்களுக்கான வாரிசு சான்றிதழ் இணையத்தில் பதிவேற்றப்படும். பின்னர் நீங்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
0 Comments