SBI வங்கியில் தேர்வே இல்லாமல் வேலை – சம்பளம் ரூ.45,000 || ஆன்லைன் பதிவு தொடக்கம்!
Resolver பணியிடங்களை நிரப்ப SBI வங்கியில் இருந்து சில நாட்களுக்கு முன் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த வங்கி பணிக்கு என 47 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு ஆன்லைன் மூலம் இன்று (10.10.2022) முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
SBI வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) ஆனது பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, Resolver பதவிக்கு என 47 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 63-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். இப்பணிக்கு தகுதியான நபர்கள் முதலில் Shortlist செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 40,000 முதல் ரூ. 45,000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க 31.10.2022 என்பது கடைசி தேதி.
விண்ணப்பிக்கும் முறை:
படி 1 – கீழே இணைக்கப்பட்டுள்ள Online Application Form-ஐ கிளிக் செய்யவும்
படி 2 – கேட்கப்படும் தேவையான தகவலை நிரப்பவும்
படி 3 – தேவையான ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்றவும் (புகைப்படம் மற்றும் கையொப்பம் போன்றவை)
படி 4 – பணம் செலுத்தி படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கவும்
படி 4 – உங்கள் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டவுடன் பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும்.
0 Comments