எட்டாம் வகுப்பு முடித்தவரா ? ரூ.62,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை!
தேசிய கேடட் கார்ப்ஸ் திண்டுக்கல் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, Driver, Store Attendant பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 02-11-2022 அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
NCC திண்டுக்கல் காலிப்பணியிடங்கள்:
- Driver – 1 பணியிடம்
- Store Attendant -1 பணியிடம்
வயது வரம்பு:
01 ஜூலை 2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கல்வி தகுதி:
NCC திண்டுக்கல் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தற்போதைய ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
தேசிய கேடட் கார்ப்ஸ் சம்பள விவரம்:
- Driver – ரூ.19500 – 62000/-
- Store Attendant – ரூ.15900 – 50400/-
NCC பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் The Officer Commanding, 14(TN) BN NCC, No: 54 Anna Nagar, Dindigul-624005 என்ற முகவரிக்கு 02-நவம்பர்-2022 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
0 Comments