MAKKAL SEVAI

Follow Us

 

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.15,000!

தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஸ்வாமி கோயிலில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.11.2022 அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



பழனி தண்டாயுதபாணி ஸ்வாமி கோயில் காலிப்பணியிடங்கள்:

மருந்தாளுநர் பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

மருந்தாளுநர் கல்வி தகுதி:

தமிழ்நாடு சித்தா எம்‌.ஜி.ஆர்‌ பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட, சித்த மருத்துவத்தில்‌ மருந்தியல்‌ பிரிவில்‌ பட்டயப்படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்த பட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

சம்பள விவரம்:

Pharmacist – ரூ.15,000/-

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி, திண்டுக்கல்-624601 என்ற முகவரிக்கு 10-நவம்பர்-2022 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Post a Comment

0 Comments