ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள் 2022 – கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களுடன்!
நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய (ஆவின்) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஆவின் நிறுவன காலிப்பணியிடங்கள்:
கால்நடை மருத்துவ ஆலோசகர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இப்பணியிடம் ஒன்பது மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பபட உள்ளது.
வயது வரம்பு:
தமிழ்நாடு நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 50-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கால்நடை மருத்துவ ஆலோசகர் கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து கால்நடை மருத்துவ பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
ஆவின் நிறுவன பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மருத்துவ ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் அனைத்து ஆவணங்களையும் இணைத்து, 13.10.2022 அன்று நடைபெற உள்ள நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். இந்த தேர்வானது 13.10.2022 அன்று காலை 11 மணி அளவில் பொதுமேலாளர், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட், E.B Colony (அஞ்சல்), பரமத்தி ரோடு, நாமக்கல் – 637 001என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
0 Comments