TANUVAS தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் வேலை – சம்பளம்: ரூ.40000/-

Follow Us

TANUVAS தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் வேலை – சம்பளம்: ரூ.40000/-

 

TANUVAS தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் வேலை – சம்பளம்: ரூ.40000/-

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ பட்டதாரி எனப்படும் Veterinary Graduate பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Veterinary Graduate காலிப்பணியிடங்கள்:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சுயநிதித் திட்டத்தில் பணிபுரிவதற்காக கால்நடை மருத்துவப் பட்டதாரி பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை வளர்ப்பில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் பேச, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


பல்கலைக்கழக பணிக்கான சம்பளம்:

Veterinary Graduate – ரூ.40000/-

Veterinary Graduate தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 10.10.2022 காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

நேர்காணல் பற்றிய விவரங்கள்:

பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய அசல் சான்றிதழ்களுடன், பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை மகளிர் மற்றும் மகப்பேறு துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நாமக்கல் – 637 002 என்ற முகவரிக்கு நேர்காணல் நடைபெறும் நாளில் அதாவது 10.10.2022 அன்று காலை 10.00 மணிக்கு கொண்டு வந்து கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Post a Comment

0 Comments