mATMன் முக்கியத்துவங்கள் மற்றும் வெற்றியாளர்களின் அனுபவங்கள்
அனைவருக்கும் வணக்கம்,
உங்கள் தற்போதைய வியாபாரத்துடன் கூடுதலாக சம்பாதிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. CSC வழங்கும் Digipay சேவையை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். டிஜிபே VLE களின் வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது.
வெள்ளம், புயல் மற்றும் தொற்றுநோய் போன்ற பாதகமான சூழ்நிலைகளில், VLE க்கள் குடிமக்களுக்கு, வீட்டு வாசலில் நிவாரண நிதியை வழங்க டிஜிபே சேவையைப் பயன்படுத்தினர். இப்போதும் கூட VLE க்கள் வயதான ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிபே சேவை மூலம் பயனாளிகளின் கணக்கில் இருந்து தொகையை பெற உதவுகிறார்கள்.
டிஜிபேயின் அடுத்த கட்டம் எம்ஏடிஎம் (mATM). இந்த எம்ஏடிஎம் டிஜிபேவுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பணம் எடுக்க வாடிக்கையாளரின் பயோமெட்ரிக் அங்கீகாரம் தேவையில்லை. வாடிக்கையாளர் தனது கணக்கில் இருந்து பணத்தை எடுக்க எந்த வகையான செல்லுபடியாகும் ஏடிஎம் கார்டும் போதுமானது.
சாதனத்திற்கு ரூபாய் 2100 மட்டும் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
குறைந்தபட்ச முதலீட்டில் VLE, அவர்களின் மையத்திலேயே ஏடிஎம் சேவையை வழங்க முடியும்.
தனி இடம் தேவையில்லை.
நல்ல வருமானத்துடன் மேலும் ஒரு வணிக வாய்ப்பு.
உங்கள் CSCல் புதிய வாடிக்கையாளர் வருகையை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உங்கள் மையத்தில் உள்ள பிற சேவைகளை உங்கள் மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வார்கள் அவர்கள் அந்த சேவைகளை பெறவும் உங்கள் மையத்திற்கு மீண்டும் வர இந்த mATM சேவை உதவுகிறது
பணம் எடுப்பதற்காக பிரத்யேக ஏடிஎம் மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை, வங்கிகளில் பணம் எடுப்பதற்காக வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கலாம்.
VLE க்கள் குடிமக்களின் வீட்டு வாசலில் பணம் எடுக்கும் சேவையையும் வழங்க முடியும்.
உங்கள் பொது சேவை மையத்தின் mATMல் அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் mATM வாயிலாக அதிகபட்சம் ரூபாய் 50000/- வரை பணம் எடுத்துக் கொடுக்கலாம். *(வாடிக்கையாளரின் ATM அட்டையில் தினசரி நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகை முழுமையாக எடுத்து கொள்ளலாம்)*மேலும் விருப்பப்பட்டால் ரசீது பிரிண்ட் எடுக்க பிரிண்டரையும் வாங்கி கொள்ளவும். இதன் வாயிலாக குறைந்த முதலீட்டில் சிறப்பான சேவையை மக்களுக்கு வழங்கி லாபம் ஈட்டலாம். இவை நமது டிஜிட்டல் சேவா போர்ட்டலில் மட்டுமே கிடைக்கும். https://eseva.csccloud.in/ cscbazaar/Default.aspx
மேலும் விவரங்களுக்கு உங்களுடைய மாவட்ட மேலாளர் அல்லது ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளவும்.
குறிப்பு: சாதனத்தை பெற்றவுடன் கூகுள் மேப்பில் உங்களுடைய மையத்தை ஏடிஎம் (ATM) மையமாகக் குறிக்கவும். இது வெளியூரிலிருந்து வரும் வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள பணம் எடுக்கும் மையத்தை தெரிந்து கொள்வதின் மூலம் உங்களுக்கு, உங்களுடைய சுற்றத்தில் அல்லாத வாடிக்கையாளர்களும் கிடைக்க உதவும். இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மாதாந்திர கட்டணம் அல்லது மறைமுக கட்டணம் எதுவும் கிடையாது.
0 Comments