ரூ.3000/- ஊதியத்தில் பகுதி நேர அரசு வேலைவாய்ப்பு – முழு விவரங்கள் இதோ!
அரியலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் (DBCWO) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் DBCWO நிறுவனம் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதி நேர துப்புரவாளர் (Part Time Sweeper) பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
DBCWO பணியிடங்கள்:
அரியலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் (DBCWO) பகுதி நேர துப்புரவாளர் (Part Time Sweeper) பணிக்கு என மொத்தமாக 11 பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Part Time Sweeper (ஆண்) – 10 பணியிடங்கள்
- Part Time Sweeper (பெண்) – 01 பணியிடம்
Part Time Sweeper வயது விவரம்:
- இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 01.07.2022 அன்றைய தினத்தின் படி, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருப்பின் அவர்களது விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
- மேலும் விண்ணப்பதாரர்களுக்கு 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.
DBCWO தகுதி:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.
Part Time Sweeper ஊதிய விவரம்:
இந்த பகுதி நேர அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு ரூ.3,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
DBCWO தேர்வு செய்யும் முறை:
இந்த பகுதி நேர அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Part Time Sweeper விண்ணப்பிக்கும் வழிமுறை:
- இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் DBCWO அலுவலகத்திற்கு நேரில் சென்று தங்களது விண்ணப்பத்தை பெற்று கொள்ளலாம்.
- பின் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள DBCWO பிரிவு அலுவலகத்திற்கு நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.
- 15.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.
Download Notification Link
0 Comments