ரூ.18,000/- சம்பளத்தில் தேர்வில்லாமல் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் மூலம் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் கீழ் Clinical Psychologist, OT Technician பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அரசு தலைமை மருத்துவமனை காலிப்பணியிடங்கள்:
- Clinical Psychologist – 1 பணியிடம்
- OT Technician – 1 பணியிடம்
Clinical Psychologist கல்வி தகுதி:
M.Sc Psychology/ M.Phil Clinical Psychology/ MA அல்லது M.Sc Psychology முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
OT Technician கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்ட OT டெக்னீஷியன் சான்றிதழ் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது, 03.08.2022 தேதியின் படி, 23 முதல் 35 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கடலூர் மாவட்ட சம்பள விவரம்:
- Clinical Psychologist – ரூ.18,000/-
- OT Technician – ரூ.15,000/-
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்முக தேர்வை மாற்றி அமைக்கவோ, ரத்து செய்யவோ மாவட்ட நல வாழ்வு சங்க தலைவருக்கு அதிகாரம் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
cuddalore.nic.in என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உறுப்பினர் செயலர்/ இணை இயக்குநர் , மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலம், மாவட்ட நலவாழ்வு சங்கம், கடலூர் மாவட்டம் என்ற முகவரிக்கு 30.09.2022 மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Comments