TNSIC தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை – சம்பளம்: ரூ.58,100/-

 

TNSIC தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை – சம்பளம்: ரூ.58,100/-

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNSIC தமிழ்நாடு தகவல் ஆணைய காலிப்பணியிடங்கள்:

அலுவலக உதவியாளர் பதவிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.

அலுவலக உதவியாளர் கல்வி தகுதி:

எட்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள்‌ சென்னை மாவட்ட எல்லைக்குள்‌ வசிப்பவராக இருத்தல்‌ வேண்டும்‌.

TNSIC வயது வரம்பு:

01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

உதவியாளர் சம்பள விவரம்:

அலுவலக உதவியாளர் – ரூ.15700-58,100/-(Level-1)

அலுவலக உதவியாளர் தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும்‌ இன்றி இரத்து செய்யவோ, சென்னை, தமிழ்நாடு ததவல்‌ ஆணைய செயலாளர்‌ அவர்களுக்கு முழு அதிகாரம்‌ உள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:

www.tnsic.gov.in என்ற இணையதளத்தில்‌ உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம்‌ செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்‌, செயலாளர்‌, தமிழ்நாடு தகவல்‌ ஆணையம்‌, எண்‌.19, அரசு பண்ணை இல்லம்‌, பேர்ன்பேட்‌, நந்தனம்‌, சென்னை-35 என்ற முகவரிக்கு 02.09.2022-க்குள்‌ கிடைக்குமாறு பதிவு தபாலில்‌ அனுப்பப்பட வேண்டும்‌.

website

Download Notification 2022 Pdf


Post a Comment

0 Comments