IBPS PO வேலைவாய்ப்பு 2022 – 6432 காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன் !
இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன், ஆனது IBPS PO அறிவிப்பை 2022 தற்போது வெளியிட்டுள்ளது. வங்கிகளில் ப்ரோபேஷனரி அதிகாரி அல்லது மேலாண்மை பயிற்சிப் பணியிடங்களுக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். IBPS PO தேர்வு தேதி, சம்பளம், காலியிட விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
IBPS PO காலிப்பணியிடங்கள்:
இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம், பங்கேற்கும் வங்கியில் மொத்தம் 6432 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
- Bank of India – 535 காலிப்பணியிடங்கள்
- Canara Bank – 2500 பணியிடங்கள்
- Punjab National Bank – 500 பணியிடங்கள்
- Punjab & Sind Bank – 253 பணியிடங்கள்
- UCO Bank – 550 பணியிடங்கள்
- Union Bank of India – 2094 பணியிடங்கள்
IBPS CRP PO/MT-XII கல்வி தகுதி:
- அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் (பட்டப்படிப்பு) அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் சமமான தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பதாரர் பதிவு செய்யும் நாளில் பட்டதாரி என்பதற்கான செல்லுபடியாகும் மதிப்பெண் சான்றிதழ் / பட்டப்படிப்பு சான்றிதழை வைத்திருக்க வேண்டும் மற்றும் ஆன்லைனில் பதிவு செய்யும் போது பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தைக் குறிப்பிட வேண்டும்.
வயது வரம்பு:
01.08.2022 தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
IBPS PO தேர்வு செயல் முறை:
- Preliminary Examination
- Main Examination & Interview
IBPS CRP PO/MT-XII விண்ணப்பக் கட்டணம்:
- SC/ST/PWBD விண்ணப்பதார்கள் – ரூ.175/-
- மற்ற விண்ணப்பதார்களுக்கு – ரூ.850 /-
- விண்ணப்பதாரர்கள் மேலே குறிப்பிட்டுள்ளபடி விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.
IBPS CRP PO/MT-XII பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
IBPS இணையதளத்தில் உள்ள தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவில் அதாவது https://www.ibps.in/ என்ற இணைப்பின் மூலம் 02.08.2022 முதல் 22.08.2022 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
Download Notification 2022 Pdf
Apply Online
0 Comments