FCI இந்திய உணவுக் கழகத்தில் மாதம் ரூ.140000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

 

FCI இந்திய உணவுக் கழகத்தில் மாதம் ரூ.140000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

இந்திய உணவுக் கழகம் (FCI) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Manager பணிக்கு என 113 பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், தேர்வாகும் பணியாளர்களுக்கு ரூ.1,40,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

இந்திய உணவுக் கழகம் காலிப்பணியிடங்கள்:

இந்திய உணவுக் கழகத்தில் (FCI) General, Depot, Movement, Accounts, Technical, Civil Engineering, Electrical Mechanical Engineering, Hindi ஆகிய துறைகளில் காலியாக உள்ள Manager பணிக்கு பின்வரும் பிரிவுகளின் கீழ் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Manager (North Zone) – 38 பணியிடங்கள்
  • Manager (South Zone) – 16 பணியிடங்கள்
  • Manager (West Zone) – 20 பணியிடங்கள்
  • Manager (East Zone) – 21 பணியிடங்கள்
  • Manager (North-East Zone) – 18 பணியிடங்கள்
Manager கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate, BE, B,Tech, Post Graduate, MBA Degree ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Manager வயது வரம்பு:
  • 01.08.2022 அன்றைய நாளின் படி, Manager (Hindi) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் உள்ளவராகவும், மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்குள் உள்ளவராகவும் இருப்பது அவசியமானது ஆகும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் வயது தளர்வு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
Manager ஊதியம்:

Manager பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,40,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

இந்திய உணவுக் கழகம் தேர்வு முறை:

Online Test, Interview மற்றும் Training ஆகிய தேர்வு முறைகளின் மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

இந்திய உணவுக் கழகம் விண்ணப்ப கட்டணம்:

ரூ.800/- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரிடமும் விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

இந்திய உணவுக் கழகம் விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் (26.09.2022) அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link

Online Application Link

Post a Comment

0 Comments