தருமபுரி மாவட்டத்தில் ரூ.35,000/- வரை சம்பளத்தில் அரசு வேலை ரெடி – 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்!1
மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறையில் இருந்து வெளியான அறிவிப்பில் தருமபுரி மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் கீழ் செய்யப்படும் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Social Worker, Data Entry Operator, Lab Technician போன்ற பல்வேறு பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிமையான முறையில் கீழே தரப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை காலிப்பணியிடங்கள்:
- District Consultant – 01
- Social Worker – 01
- Data Entry Operator – 01
- Physiotherapist – 01
- Instructor for Young Hearing Impaired Children – 01
- Hospital Worker – 04
- Block Account Assistant – 01
- Driver – 03
- Cleaner – 05
- Auxiliary Nursing Midwife – 01
- Dental Assistant – 01
- Lab Technician – 01
DMPH கல்வி தகுதி :
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.
- District Consultant – MBBS, BDS அல்லது Public Health, Social Science பாடப்பிரிவில் Post Graduate Degree
- Social Worker – பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate அல்லது Postgraduate Degree
- Data Entry Operator – 10 ஆம் வகுப்பு
- Physiotherapist – Physiotherapy பாடப்பிரிவில் Bachelors (BPT) Degree
- Instructor for Young Hearing Impaired Children – Diploma Degree (DTYDHH)
- Hospital Worker – 8 ஆம் வகுப்பு
- Block Account Assistant – B.Com Degree (With Tally)
- Driver – 10 ஆம் வகுப்பு
- Cleaner – 8 ஆம் வகுப்பு
- Auxiliary Nursing Midwife – Multipurose Health Worker பாடப்பிரிவில் ITI
- Dental Assistant – 12 ஆம் வகுப்பு மற்றும் Dental Hygienist பாடப்பிரிவில் ITI
- Lab Technician – DMLT, CMLT
DMPH வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 18 அல்லது 23 வயது எனவும், அதிகபட்ச வயது வரம்பு 35 வயது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
DMPH ஊதியம்:
விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணிக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.6,500/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
DMPH தேர்வு முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
DMPH விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். கடைசி நாளுக்குள் (18.08.2022) பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
0 Comments