தமிழக அரசு வனத்துறையில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை!
தமிழ்நாடு வனத்துறையில் (TN Forest) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Project Assistant பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (22.07.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தமிழ்நாடு வனத்துறையில் (TN Forest) காலியாக உள்ள Project Assistant (DNA), Project Assistant (Health Monitoring), Project Assistant (STR, Delineating) , Project Assistant (SDMA, Hematological), Project Assistant (Assessment & Identification) ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 08 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பயோடெக்னாலஜி / மூலக்கூறு உயிரியல் / மரபியல் / மரபணு பொறியியல் போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் ME, M.Tech, M.Sc, Master Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பதாரர்கள் 01-06-2022 தேதியின் படி, அதிகபட்சம் 28 ஆக வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
- Project Assistant (DNA) / Project Assistant (Health Monitoring) பணிகளுக்கு ரூ.20,000/- என்றும், Project Assistant (STR, Delineating) / Project Assistant (SDMA, Hematological) / Project Assistant (Assessment & Identification) பணிகளுக்கு ரூ.25,000/- என்றும் மாத ஊதியமாக தரப்படும்.
- மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் விண்ணப்பிக்கும் நபர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
தமிழ்நாடு வனத்துறை விண்ணப்பிக்கும் முறை:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து aiwcrte@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
0 Comments