தமிழ்நாடு சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் Part-Time வேலைவாய்ப்பு – தமிழ் தெரிந்தவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க !
தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் ஆனது பகுதி நேர துப்புரவு பணியாளர் பணிக்கான அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து பின் உடனே 25.07.2022க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
DBCWO தருமபுரி காலிப்பணியிடங்கள்:
மேலே குறிப்பிட்டுள்ள பகுதி நேர துப்புரவு பணியாளர் பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
துப்புரவு பணியாளர் வயது வரம்பு:
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் தர்மபுரி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-07-2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 34 வயதுடையவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி, வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
தருமபுரி துப்புரவு பணியாளர் கல்வி தகுதி:
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு ஆண் விண்ணப்பதார்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
DBCWO மாத சம்பளம்:
மேற்கண்ட பகுதி நேர வேலைக்கு துப்புரவு பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் தொகுப்பூதியமாக ரூ.3000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை:
தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் உள்ள இந்த பகுதி நேர துப்புரவு பணியாளர் பதவிக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
வயது, கல்வித் தகுதி, சமீபத்திய புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் உரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 25.07.2022 க்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Comments