தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழக அரசு வேலைவாய்ப்பு – அகவிலைப்படி சம்பளம் நிர்ணயம் !

 

தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழக அரசு வேலைவாய்ப்பு – அகவிலைப்படி சம்பளம் நிர்ணயம் !

தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌, திருவண்ணாமலை மண்டலத்தில்‌ நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையங்களில்‌ பணிபுரிய பருவகால பட்டியல்‌ எழுத்தர், பருவகால உதவுபவர் மற்றும்‌ பருவகால காவலர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.




TNCSC திருவண்ணாமலை காலிப்பணியிடங்கள்:

அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி, பருவகால பட்டியல்‌ எழுத்தர், பருவகால உதவுபவர் மற்றும்‌ பருவகால காவலர் பதவிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

  • பருவகால பட்டியல்‌ எழுத்தர் – B.Sc in Biology, Zoology, Chemistry
  • பருவகால உதவுபவர் – +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பருவகால காவலர் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் திருவண்ணாமலை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் 01-07-2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

  • BC/ BC (M)/ MBC விண்ணப்பதாரர்கள்: 2 ஆண்டுகள்
  • SC/ SC (A)/ ST விண்ணப்பதாரர்கள்: 5 ஆண்டுகள்
  • தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழக சம்பள விவரம்:

    • பருவகால பட்டியல்‌ எழுத்தர் – மாத ஊதியம்‌ ரூ.528543499 அகவிலைப்படி
    • பருவகால உதவுபவர் – மாத ஊதியம்‌ ரூ.521843499 அகவிலைப்படி
    • பருவகால காவலர் – மாத ஊதியம்‌ ரூ.521843499 அகவிலைப்படி

    விண்ணப்பிக்கும் முறை:

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள்‌ மற்றும்‌ பெண்கள்‌ (பருவகால காவலர்‌ பணி தவிர) உரிய கல்விச்சான்று, சாதிச்‌ சான்று, வேலைவாய்ப்பு அலுவலக பதிவிற்கான சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச்‌ சான்று, வயது உறுதிச்சான்று, ஆதார்‌ அட்டை, முன்னாள்‌ ராணுவ வீரராக இருப்பின்‌ அதற்கான சான்று, 50% மாற்றுத்திறனாளியாக இருப்பின்‌ அதற்கான சான்று மற்றும்‌ புகைப்படத்துடன்‌ விண்ணப்பிக்கலாம்‌.

    விண்ணப்பதாரர்‌ தரும்‌ தகவல்கள்‌ அனைத்தும்‌ அசல்‌ ஆவணங்களின்படி அமைய வேண்டும்‌. மேலும்‌ சமர்ப்பிக்கப்படும்‌ ஆவணங்களின்‌ நகல்களின்‌ ஒவ்வொரு பக்கமும்‌ தாங்கள்‌ சான்றொப்பமிடவேண்டும்‌. மேலும்‌ விண்ணப்பங்கள்‌ மண்டல அலுவலகத்தில்‌ சேர வேண்டிய நாள்‌: 25.07.2022 மாலை 05.00 மணிக்குள்‌ வந்து சேர வேண்டும்‌. பின்னர்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்படும்‌ என்று தெரிவிக்கப்படுகிறது. நிர்வாக காரணங்களுக்காக நேர்காணலை தள்ளி வைப்பதற்கோ அல்லது ரத்து செய்வதற்கோ மண்டல மேலாளர்‌ அதிகாரத்திற்கு உட்பட்டது.


Post a Comment

0 Comments