தமிழக சுகாதார இயக்குநரகத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை ரெடி!
தமிழக சுகாதார துறையின் கீழ் செயல்படும் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகத்தில் (DPHPM) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Database Administrator, Programmer ஆகிய பதவிகளுக்கு என 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
தமிழக சுகாதார இயக்குநரகம் காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், Database Administrator மற்றும் Programmer ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடங்கள் வீதம் என மொத்தமாக 02 பணியிடங்கள் தமிழக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகத்தில் (DPHPM) காலியாக உள்ளது.
DPHPM கல்வி தகுதி:
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் EEE / ECE / IT / CS போன்ற பாடப்பிரிவில் B.E / B.Tech Degree அல்லது MCA அல்லது M.Sc Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
- Data Base Administrator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Oracle, Postgres, MS SQL போன்ற கணிப்பொறி மொழியில் கைதேர்ந்தவராக இருப்பின் முன்னுரிமை தரப்படும்.
- Programmer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் J2EE, Java, VB, Dot .NET போன்ற கணிப்பொறி மொழியில் கைதேர்ந்தவராக இருப்பின் முன்னுரிமை தரப்படும்.
தமிழக சுகாதார இயக்குநரகம் அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 03 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
DPHPM ஊதியம்:
இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.40,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
தமிழக சுகாதார இயக்குநரகம் தேர்வு முறை:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 03.08.2022 அன்று கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
DPHPM விண்ணப்பிக்கும் முறை:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து தேர்வுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி:
Directorate of Public Health and Preventive Medicine,
359, DMS Campus, Anna Salai,
Teynampet, Chennai – 600 006.
0 Comments