பத்தாம் வகுப்பு படித்தவரா ? ரூ.35000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு !

 பத்தாம் வகுப்பு படித்தவரா ? ரூ.35000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு !

இந்திய விளையாட்டு ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Massage Therapist பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SAI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Massage Therapist பணிக்கென மொத்தம் 104 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விளையாட்டு ஆணையம் கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் விளையாட்டு துறையில் முன் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்திய விளையாட்டு ஆணையம் ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAI தேர்வு செய்யப்படும் முறை:

Massage Therapist பணிக்கு விண்ணப்பிக்கு விண்ணப்பதாரர்கள் Written Test, Skill Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதனைrecruitment.massagetherapist@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NOTIFICATION

Post a Comment

0 Comments