How to download e-Pan? இ-பான் கார்டை எப்படி டவுன்லோடு செய்வது?

E-Pan card apply : 

நமது அடையாள ஆவணங்களில் ஒன்றாக பான் கார்ட் கருதப்படுகிறது. வருமான வரி தாக்கல் செய்வதற்கு பான் கார்ட் மிலவும் அவசியமான ஒன்று. அப்படிப்பட்ட பான் கார்ட் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என தெரிந்துக்கொள்ளுங்கள்…







பொதுவாகவே அடையாள ஆவணங்கள் தொலைந்து போனால் அவற்றை முறைகேடாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளதால் முதலில் அது குறித்து புகார் அளிப்பது சிறந்தது. பான் கார்ட் தொலைந்துவிட்டால் டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

e pan card online : விண்ணப்பிப்பது எப்படி?

டூப்ளிகேட் பான் கார்டுக்கு என்எஸ்டிஎல் (NSDL) / யூடிஐஐடிஎஸ்ல்(UTIITSL) ஏஜன்சிகள் மூலமாக விண்ணப்பித்து வருமான வரித்துறையின் அனுமதியுடன் பான் கார்டினை பெறலாம்.

இந்த இரண்டு ஏஜன்சிகள் மூலமாகவும் புதிய பான் கார்டு, பான் கார்டில் திருத்தங்கள் அல்லது டூப்ளிகேட் பான் கார்டு போன்றவற்றை பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம்.

என்எஸ்டிஎல் (NSDL) லிங்க்: //www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html
யூடிஐஐடிஎஸ்ல் (UTIITSL) லிங்க்: //www.myutiitsl.com/PAN_ONLINE/CSFPANApp

இந்த இணையதளத்திற்குள் நுழைந்து டூப்ளிகேட் அல்லது ரீபிர்ண்ட் பான் கார்டு தேர்வை தேர்வு செய்து விண்ணப்பிக்கும் போது உங்களது பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் மற்றும் பான் எண் உள்ளிட்டவையை பதிவு செய்ய வேண்டும்.

உடனடியாக இ-பான் கார்டு பெறும் வசதியை வருமான வரித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இ-பான் கார்டு பெற எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. Incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் இ-பான் கார்டை பெறலாம்.

e pan card form : இ-பான் கார்ட் பெறுவது குறித்து தெரிந்து கொள்ள 5 விஷயங்கள்

1. பான் கார்ட் வைத்திருக்கும் ஒருவர், இ-பான் கார்ட் பெற முடியாது.

2. தனி நபர் மட்டுமே இந்த இ-பான் கார்டை பெற முடியும். குடும்பங்களோ, நிறுவனங்களோ பெற முடியாது.
ஆதார் அட்டையோடு இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் இருக்க வேண்டும். ஓடிபி மூலம் ஆதாரம் உறுதி செய்யப்படும்.

3. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணை உறுதி செய்ய uidai.gov.in என்ற இந்த இணையதளத்துக்கு செல்லுங்கள் ஆதாரின் இ- கே.ஒய்.சி உறுதி செய்யப்பட்டபின், இ – பான் கார்டை பெற முடியும்.

4. ஆதார் அட்டையில் உள்ள தகவல்களைப் பொருத்தே இ – பான் கார்ட் கொடுக்கப்படும்.
பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற தகவல்களில் பிழை இருந்தால்,uidai.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று திருத்திக் கொள்ளுங்கள்.

5. இ-பான் கார்டை பெற விண்ணப்பதாரரின் கையொப்பம் வெள்ளை காகிதத்தில் இடப்பட்டு, ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும். 200 டி.பி.ஐ, அதிகபட்சம் 10 கே.பி அளவு கொண்ட படமாக இருக்க வேண்டும்.

Post a Comment

0 Comments