தமிழக அரசில் கிளெர்க் வேலைவாய்ப்பு – 10 வது தேர்ச்சி அடைந்தோர் மற்றும் அடையாதோர் விண்ணப்பிக்கலாம்..!

 

தமிழக அரசில் கிளெர்க் வேலைவாய்ப்பு – 10 வது தேர்ச்சி அடைந்தோர் மற்றும் அடையாதோர் விண்ணப்பிக்கலாம்..!

தஞ்சாவூர் மாவட்ட Land Survey Records Department எனும் நில அளவை பதிவேடுகள் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Record Clerk பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

Record Clerk காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில் Record Clerk பணிக்கு என நில அளவை பதிவேடுகள் துறையில் ஒரு பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

Record Clerk கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தோல்வியுற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Record Clerk வயது விவரம்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பானது, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 முதல் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • மேலும் இப்பணிக்கு அரசு விதிமுறைப்படி அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.
  • Record Clerk ஊதிய விவரம்:

    இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசு ஊதிய அளவின் படி Level 3 அளவில் குறைந்த பட்சம் ரூ.16,600/- முதல் அதிகபட்சம் ரூ.52,400/- வரை மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Record Clerk தேர்வு முறை:

    இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் வாயிலாக திறமையான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Record Clerk விண்ணப்பிக்கும் முறை:

    ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து, பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தயார் செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 15.07.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் தபால் வந்து சேரும் வண்ணம் தபால் அனுப்பி விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

Post a Comment

0 Comments