Data Entry Operator பணிக்கு ரூ.12,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க விரையுங்கள்..!

 

Data Entry Operator பணிக்கு ரூ.12,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க விரையுங்கள்..!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கணினி இயக்குபவர் (Block Level Data Entry Operator) பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.




கணினி இயக்குபவர் காலிப்பணியிடங்கள்:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் செயல்பட்டு வரும் சத்துணவு திட்டம் பிரிவில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் (Block Level Data Entry Operator) பணிக்கு என 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கணினி இயக்குபவர் கல்வி விவரம்:

கணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree படித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.

கணினி இயக்குபவர் தகுதிகள்:
  • விண்ணப்பதாரர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தட்டச்சு செய்வதில் இளநிலை சான்றிதழ் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கணினி இயக்குவதில் MS Office பிரிவில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சுற்றியுள்ள 20 கிலோ மீட்டர் தொலைவிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
கணினி இயக்குபவர் வயது வரம்பு:

Block Level Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.07.2022 அன்றைய நாளின் படி, குறைந்தபட்சம் 21 வயது எனவும், அதிகபட்சம் 40 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கணினி இயக்குபவர் ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியில் இருக்கும் பொழுது மாதம் தோறும் ரூ.12,000/- ஊதியமாக பெறுவார்கள்.

கணினி இயக்குபவர் தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

கணினி இயக்குபவர் விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 05.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சி தலைவர்,
மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் (சத்துணவு பிரிவு).
3 வது தளம், கொக்கிரகுளம்,
திருநெல்வேலி – 09.

NOTIFICATION 

Post a Comment

0 Comments