Bank of Baroda வங்கியில் Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 300+ காலிப்பணியிடங்கள்..!
பேங்க் ஆப் பரோடா (BOB) வங்கியில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Relationship Manager, Credit Analyst பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
Bank of Baroda (BOB) காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Relationship Manager, Credit Analyst பணிக்கு என பேங்க் ஆப் பரோடா (BOB) வங்கியில் 325 காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
- Relationship Manager – 175 காலிப்பணியிடங்கள்
- SMG / S IV பிரிவில் – 75 பணியிடம் மற்றும் MMG / S III பிரிவில் – 100 பணியிடம்.
- Credit Analyst – 150 காலிப்பணியிடங்கள்
- MMG / S III பிரிவில் – 100 பணியிடம் மற்றும் MMG / S II பிரிவில் – 50 பணியிடம்
Bank of Baroda (BOB) கல்வித் தகுதி:
- Relationship Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் Finance பாடப்பிரிவில் Post Graduate Degree / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் இப்பணிக்கு CA / CFA / CS / CMA முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று
தெரிவித்துள்ளது. - Credit Analyst பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் Finance பாடப்பிரிவில் Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் இப்பணிக்கு CA / CMA / CS / CFA முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
- Relationship Manager பணியில் SMG / S IV பிரிவிற்கு 35 வயது முதல் 42 வயது வரை உள்ளவர்களும், MMG / S III பிரிவிற்கு 28 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
- Credit Analyst பணியில் MMG / S III பிரிவிற்கு 28 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களும், MMG / S II பிரிவிற்கு 25 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
- மேலும் இப்பணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாக பார்க்கலாம்.
Bank of Baroda (BOB) ஊதிய விவரம்:
விண்ணப்பதாரர்கள் தேர்வான பின் பணியின் போது தேர்வாகும் பணியின் பிரிவிற்கு ஏற்றாற்போல் மாத ஊதியம் கீழுள்ளவாறு பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
- MMGS II பிரிவிற்கு குறைந்தது ரூ.48,170/- முதல் அதிகபட்சம் ரூ.69,180/- வரை வழங்கப்படும்.
- MMGS III பிரிவிற்கு குறைந்தது ரூ.6,840/- முதல் அதிகபட்சம் ரூ.78,230/- வரை வழங்கப்படும்.
- SMG/S-IV பிரிவிற்கு குறைந்தது ரூ.76,010/- முதல் அதிகபட்சம் ரூ.89,890/- வரை வழங்கப்படும்.
Bank of Baroda (BOB) விண்ணப்ப கட்டணம்:
- GEN / OBC / EWS விண்ணப்பதாரர்கள் ரூ.600/- செலுத்த வேண்டும்.
- SC / ST / PWD / Women விண்ணப்பதாரர்கள் ரூ.100/- செலுத்த வேண்டும்.
Bank of Baroda (BOB) தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வுகள் மூலம் Shortlist செய்யப்பட்டு அதன்பின் நேரடியாக நேர்முகத் தேர்வு அல்லது / மற்றும் குழு கலந்துரையாடல் வாயிலாக தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
Bank of Baroda (BOB) விண்ணப்பிக்கும் முறை:
வங்கிப் பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள அதிகாரப்பூர்வ இணைப்பின் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து 12.07.2022 ம் தேதிக்குள் சமர்ப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.
Bank of Baroda (BOB) அனுபவ விவரம்:
மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையின் பிரிவில் குறைந்தது 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
0 Comments