ரூ.1 லட்சம் ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (CUTN) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Faculty, Student Internship ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் (CUTN) காலியாக உள்ள Student Internship பணிக்கு என 01 பணியிடமும், Faculty பணிக்கு என 03 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Student Internship, Faculty கல்வித் தகுதி:
Student Internship பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Engineering பாடப்பிரிவில் B.E, B.Tech Degree அல்லது life Science / Microbiology / Molecular Biology பாடப்பிரிவில் Post Graduate Degree படித்தவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு கல்லூரி இறுதி ஆண்டு படித்து கொண்டிருப்பவர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
Faculty பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Public Administration, Geography, Sociology போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree அல்லது Ph.D Degree படித்தவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் NET தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
Student Internship, Faculty வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
Student Internship, Faculty ஊதியம்:
Student Internship பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.5,000/- மாத ஊக்கத்தொகையாக பெறுவார்கள்.
Faculty பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.1,15,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
CUTN தேர்வு முறை:
இப்பணிகளுக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.
Shortlist செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பானது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
CUTN விண்ணப்பிக்கும் முறை:
Student Internship பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (15.06.2022) சமர்ப்பிக்க வேண்டும்.
Faculty பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து இறுதி நாளுக்குள் (25.06.2022) dace@cutn.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
0 Comments