இந்து சமய அறநிலையத் துறையில் பணிபுரிய வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்..!

 

இந்து சமய அறநிலையத் துறையில் பணிபுரிய வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்..!

மதுரையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையில் (TNHRCE) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Medical Officer, Nurse, MPHW ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.




இந்து சமய அறநிலையத்துறை பணியிடங்கள்:

மதுரையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) வெளியிட்ட அறிவிப்பில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் Medical Officer, Nurse, MPHW ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TNHRCE கல்வி விவரம்:
  • மருத்துவ அலுவலர் (Medical Officer) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MD அல்லது MBBS Degree படித்தவராக இருக்கலாம்.
  • செவிலியர் (Nurse) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma Degree படித்தவராக இருக்கலாம்.
  • பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multi Purpose Hospital Worker) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10 ஆம் அல்லது 12 ஆம் வகுப்பு படித்தவராக இருக்கலாம்.
  • TNHRCE வயது விவரம்:

    விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

    TNHRCE ஊதிய விவரம்:

    இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    TNHRCE தேர்வு செய்யும் முறை:

    இந்த இந்து சமய அறநிலையத்துறை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • TNHRCE விண்ணப்பிக்கும் வழிமுறை:

    இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 06.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

    தபால் செய்ய வேண்டிய முகவரி:

    துணை ஆணையர் / செயல் அலுவலர்,
    அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,
    மதுரை.

  • TNHRCE Notification & Application Link

Post a Comment

0 Comments