TNHRCE JOBS 2022 IN TAMIL | TAMILNADU GOVERNMENT JOBS 2022

 

8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு – மே 30 கடைசி நாள்!

கிருஷ்ணகிரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE Krishnagiri) கடந்த மாதம் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Office Assistant, Night Watchman பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் நான்கு நாட்கள் (30.05.2022) மட்டுமே மீதம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNHRCE வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • கிருஷ்ணகிரி மாவட்ட இந்து சமய அறநிலையத் துறையில் Office Assistant, Night Watchman ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 10 பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • இந்த இந்து சமய அறநிலையத்துறை பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Night Watchman பணிக்கு மிதிவண்டி ஓட்ட தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் 01.07.2021 அன்றைய நாளின் படி 18 வயது முதல் 32 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். மேலும் SC / ST – 05 வருடம், BC / MBC / DNC – 02 வருடம் என வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • இப்பணிகளுக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNHRCE விண்ணப்பிக்கும் விதம்:

இந்த இந்து சமய அறநிலைய துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, க.எண்.1/304-4, 3-வது குறுக்குத் தெரு, இராஜாஜி நகர், இராயக்கோட்டை ரோடு, கிருஷ்ணகிரி – 635 002. என்ற முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (30.05.2022) விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TNHRCE Notification & Application Link

Post a Comment

0 Comments