NTPC நிறுவனத்தில் ரூ.1,20,000/- ஊதியத்தில் வேலை ரெடி – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
என்டிபிசி லிமிடெட் (NTPC) எனும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் தற்போது Assistant Officer பதவிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட Assistant Officer பணிக்கு என்று 10 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
NTPC Limited பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பின் படி, Assistant Officer பணிக்கு என்று மொத்தமாக 10 காலிப்பணியிடத்திற்கு மட்டும் ஆள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.
NTPC Limited கல்வி தகுதி :
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Engineering / Degree / PG Degree / Diploma போன்ற ஏதேனும் ஒன்றில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NTPC Limited வயது விவரம்:
இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 30 வயது மிகாமல் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கப்படும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் பார்க்கலாம்.
NTPC Limited ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப ஊதியம் பெறுவார்கள்.
NTPC Limited விண்ணப்ப கட்டணம்:
Gen / EWS / OBC (NCL) – ரூ.300/-
SC / ST / PWD / XSM / Female – கட்டணம் கிடையாது
NTPC Limited தேர்வு முறை:
இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
NTPC Limited விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு 03.06.2022 ம் தேதிக்குள் தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் இப்பதிவின் கீழுள்ள லிங்க் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.
0 Comments