தமிழக ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.1,20,000/-

 

தமிழக ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.1,20,000/-

சென்னை மெட்ரோ ரெயில் கழகத்தின் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் AGM (Rolling Stock),JGM (Rolling Stock), DGM (Rolling Stock), JGM (Design), DGM (Civil Maintenance),Manager (Civil Maintenance), Manager (Rolling Stock), DM (Rolling Stock), AM (Rolling Stock) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி சென்னை மெட்ரோ ரெயில் கழகத்தின் சார்பில் AGM (Rolling Stock),JGM (Rolling Stock), DGM (Rolling Stock), JGM (Design), DGM (Civil Maintenance),Manager (Civil Maintenance), Manager (Rolling Stock), DM (Rolling Stock), AM (Rolling Stock) பணிக்கு 9 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் BE/B.Tech அல்லது பணிக்கு தொடர்புடைய பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது பணியின் அடிப்படையில் 30 முதல் 47 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பணி முன்னனுபவம் கொண்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் மற்றும் முன்னனுபவம் குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியமாக மாதம் ரூ.60,000/- முதல் ரூ.1,20,000/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 7.01.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

Post a Comment

1 Comments

  1. VideoGames.us | YouTube | Videodl.cc
    VideoGames.us is a premium content provider 유튜브 음원 추출 that creates the best video-games for your smartphone and tablet. With over 40 years of experience in the industry

    ReplyDelete