தமிழக மின் வாரியத்தில் தொழில் பழகுநர் பயிற்சி – நவம்பர் 8 முதல் நேர்காணல்!

Follow Us

தமிழக மின் வாரியத்தில் தொழில் பழகுநர் பயிற்சி – நவம்பர் 8 முதல் நேர்காணல்!

 

தமிழக மின் வாரியத்தில் தொழில் பழகுநர் பயிற்சி – நவம்பர் 8 முதல் நேர்காணல்!

தமிழக மின் வாரியத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான நேர்காணல் வரும் நவம்பர் 8, 9, 10 ஆகிய தினங்களில் சென்னையில் உள்ள தெற்கு மின் பகிர்மான பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

தொழில் பழகுநர் பயிற்சி:

தமிழகத்தில் கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கில் ஏராளமானோர் தங்கள் வேலைகளை இழந்து பொருளாதார ரீதியாக மிக சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அரசு நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு தொற்றை குறைந்தது மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு செல்லும் நேரத்தில் அடுத்த தாக்குதலாக கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்தது. இதனால் மக்கள் வேலைக்கு செல்வது என்பது பெரும் சவாலாக இருந்து வந்தது. இந்த நேரத்தில் அரசு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியது.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை தலைமையகத்திற்கு அனுப்ப அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் மூலம் வழங்கப்படும் தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஆட்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. எலக்ட்ரீசியன், கம்பியாளர், சர்வேயர், கணினி இயக்குனர், கருவி மெக்கானிக், வரைவாளர் போன்ற 390 பணியிடங்களுக்கு தொழில் பழகுநர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இதற்கான நேர்காணல் நவம்பர் 8, 9, 10 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. தொழில் பழகுநர் நேர்காணல் சென்னை அண்ணாநகரில் உள்ள தெற்கு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடக்கிறது. ஓராண்டுக்கு நடைபெறும் தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ரூ.8050 வழங்கப்படும். நேர்காணலில் கலந்து கொள்பவர்கள் தங்களின் 10, 12 ஆம் வகுப்புகள் மற்றும் ஐடிஐ போன்ற கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு பதிவு அட்டை, ஆகிய ஆவணங்களை எடுத்து வர வேண்டும்.

Post a Comment

1 Comments