8000 வேலைவாய்ப்புகள்
இந்நிலையில், இந்தாண்டு மட்டும் இந்தியா முழுவதும் உள்ள 35 நகரங்களிலிருந்து மொத்தம் 8000க்கும் மேற்பட்டோரை வேலைக்கு எடுக்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அமேசான் நிறுவனத்தின் HR பிரிவு தலைவர் தீப்தி வர்மா கூறுகையில், "பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், கோயம்புத்தூர், புனே உட்பட நாட்டின் 35 நகரங்களில் நேரடியாக 8000 பேரை வேலைக்கு எடுக்கவுள்ளோம். ஐடி, கஸ்டமர் கேர், நிதி, சட்டம் உள்ளிட்ட பணியிடங்களில் ஆட்களைத் தேர்வு செய்யவுள்ளோம்.
20 லட்சம் பேருக்கு வேலை
செப் 16இல் வேலைவாய்ப்பு முகாம்வேலை
அமேசான் நிறுவனம் இந்தியாவில் சீராக வளர்ந்து வருகிறது. வரும் காலத்தில் அதிக எண்ணிக்கையிலான நபர்களை வேலைக்கு அமர்த்த அமேசான் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் தொடக்கமாகவே வரும் செப்டம்பர் 16ஆம் தேதி அமேசான் தனது முதல் வேலைவாய்ப்பு முகாமை இந்தியாவில் நடத்துகிறது. முற்றிலும் காணொலி மூலம் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாம், 21ஆம் நூற்றாண்டில் இதுவரை நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் மிகப் பெரியதாக இருக்கும் என்றும் தீப்தி வர்மா குறிப்பிட்டார்.
இது தொடக்கம் தான்
மேலும் செப்டம்பர் 16ஆம் தேதி நாடு முழுவதும் வேலைவாய்ப்புகள் குறித்த பயிற்சியும் அளிக்க அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். உலக அளவில் அமேசான் நிறுவனத்திற்கு 2ஆவது பெரிய தொழில்நுட்ப மையமாக இந்தியா இருப்பதாகத் தெரிவித்த தீப்தி வர்மா, அமேசானில் இப்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். இது தொடக்கம் தான் என்றும் வரும் காலங்களில் இன்னும் அதிக நபர்களை பணியமர்த்த அமேசான் திட்டமிட்டுள்ளதாகவும் தீப்தி வர்மா தெரிவித்தார்.
0 Comments