தமிழகத்தில் தபால் ஆயுள் காப்பீடு முகவர் வேலைவாய்ப்பு – ஜூலை 9ல் நேர்முகத்தேர்வு!

 

தமிழகத்தில் தபால் ஆயுள் காப்பீடு முகவர் வேலைவாய்ப்பு – ஜூலை 9ல் நேர்முகத்தேர்வு!

தமிழகத்தில் தபால் ஆயுள் காப்பீடு மற்றும் ஊரக தபால் ஆயுள் காப்பீடு முகவர் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு வரும் ஜூலை மாதம் 9 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள தபால் அலுவலகங்களின் மூத்த கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முகத்தேர்வு

தபால் ஆயுள் காப்பீடு களில் முகவர் பணிக்கான புதிய ஆள் எடுப்பு பணிகள் தற்போது நடைபெற உள்ளது. அதன் படி வரும் ஜூலை 9 ஆம் தேதி அன்று இப்பணிக்கான நேர்முகத் தேர்வானது சென்னை தாம்பரம் பகுதியில் அமைந்துள்ள தபால் அலுவலங்களின் மூத்த கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இது குறித்து தாம்பரம் கோட்டம், தபால் அலுவலக மூத்த கண்காணிப்பாளர் டி.வி சுந்தரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தபால் ஆயுள் காப்பீடு, ஊரக தபால் ஆயுள் காப்பீடுகளுக்கான நேரடி முகவர் பணிக்கான தேர்வுகள் நடைபெற உள்ளது.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருப்பதுடன் 18 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். 

வேலையில்லா இளைஞர்கள், சுயதொழில் செய்பவர்கள், முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம். கணினி பயிற்சி, ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், சென்னை மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

இதர காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், தபால் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.

 விருப்பமுள்ளவர்கள் dopliccc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண்ணை குறிப்பிட்டு, கல்வி சான்றிதழ், வயது மற்றும் முகவரி சான்றுகளின் நகல்களை இணைத்து வருகிற 10-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்கள் ரூ.5 ஆயிரத்துக்கு தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை பணப்பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்.

மேற்கண்ட தகவல்களை முதுநிலை தபால் கோட்ட கண்காணிப்பாளர் மு.ஸ்ரீராமன் தெரிவித்து உள்ளார்.

Post a Comment

0 Comments