விஜய் டிவி குக் வித் கோமாளி புகழ் படைத்த புதிய சாதனை

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன், உமா ரியாஸ்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 2 கடந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது.




நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கன்னி ஆகியோர் இடம்பெற்றிருக்கும் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் உள்ளனர். இவர்களின் நகைச்சுவையை ரசிக்க பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. மேலும் சோஷியல் மீடியாக்களில் ஆர்மி பக்கமும், ரசிகர் பக்கங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அஷ்வினை 1.2 மில்லியன் பேர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர். அதேபோல் ஷிவாங்கியின் கணக்கை 1.8 மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது புகழும் 1 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றுள்ளார். இதற்காக கேக் வெட்டி ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார் புகழ். அதை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் புகழ்
.



தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரபலமான புகழுக்கு பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. ஏற்கெனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் புகழ் ஹரி இயக்கத்தில் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

Post a Comment

0 Comments