உடல் பருமனைக் குறைக்க உதவும் அருமருந்து

 உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் நிலாவரை பொன்னாங்கண்ணிக் கீரைச் சூரணத்தைப் பயன்படுத்திப் பலனடையுங்கள்.தேவையான பொருள்கள்

நிலாவரை - 150 கிராம்

ஆவாரம் பூ - 150 கிராம்

பொன்னாங்கண்ணிக் கீரை - 150 கிராம்

செய்முறை

முதலில் நிலாவரை இலை , ஆவாரம் பூ மற்றும் பொன்னாங்கண்ணிக் கீரை ஆகியவற்றைப் பறித்து இளநிழலில் உலரவைத்து எடுத்துக் கொள்ளவும். நன்கு உலரவைத்து பின்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும். நிலாவரை இலை, ஆவாரம் பூ மற்றும் பொன்னாங்கண்ணிக் கீரை அரைக்க முடியாதவர்கள் நாட்டு மருந்துக்கடையில் அரைத்து வைத்துள்ள பொடியை தலா 100 கிராம் வாங்கி ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளலாம்.

பயன்கள்

இந்த சூரணம் உடல் பருமனைக் குறைப்பதற்கு உதவும் அருமருந்தாகும். மேற்கூறிய குறைபாடு உள்ளவர்கள் இந்தச் சூரணத்தை இரண்டு கிராம் அளவு எடுத்த சாப்பாட்டிற்குப் பின்பு சுடுநீரில் கலந்து குடித்து வரவும்.

நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாகச் சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

Post a Comment

0 Comments