கவினை காதலிப்பது உண்மையா...? லாஸ்லியா கூறிய பதில்

 நடிகை லாஸ்லியாவிடம் ஒரு பேட்டியில் கவின் மற்றும் உங்களுக்கு இடையே உள்ள உறவை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு அதைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.பிக்பாஸ் மூன்றாவது தமிழ் சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கலந்து கொண்டவர்கள் தனக்கென அதிக ரசிகர்கள் பட்டாளத்தை பெற்ற்வர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. இவர்கள் இவருவம் பிக்பாஸ் வீட்டிற்குள் காதல் செய்தது அனைவரும் அறிந்த ஒன்று தான். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இருவரும் தற்போது வரை தங்கள் காதலை குறித்த எந்த தகவலையும் கூறவில்லை. இருவரும் மிகவும் பிசியாக படத்தில் நடிக்க கமிட் ஆகிவருகிறார்கள்.

ஆம் நடிகர் கவின் லிப்ட் என்ற படத்திலும் நடிகை லாஸ்லியா கூகுள் குட்டப்பன் மற்றும் பிரெண்ட்ஷிப் என்ற படத்திலும் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை லாஸ்லியாவிடம் ஒரு பேட்டியில் கவின் மற்றும் உங்களுக்கு இடையே உள்ள காதலை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு எனக்கும் கவினிற்கும் இருப்பது எனது தனிப்பட்ட விஷயம் அதைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் நடிக்கும் படத்தை பற்றி என்னிடம் கேளுங்கள் நான் கூறுகிறேன்.


அதற்குப் பிறகு அவரிடம் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது நடிகர் தர்ஷனை அண்ணன் அண்ணன் என்று அழைத்து விட்டு தற்போது அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்கள் எதற்கு ...? என்று கேட்டவுடன் அதற்கு லாஸ்லியா "அதுவும் எனது தனிப்பட்ட விருப்பம் இது சினிமா. படத்தில் இருவரும் அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து விட்டு அதன் பின்னர் அதிலிருந்து வெளியே வரப்போகிறோம் என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments