ஸ்ட்ராப்லெஸ் காக்டெய்ல் கவுனில் மிளிரும் ஜெனிலியா!

  'ஹா ஹா ஹாசினி' என்று துருதுருவென சுற்றித் திரிந்த ஜெனிலியாவை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. சில தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இன்றும் இருக்கிறது. பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரும் நடிகருமான ரிதேஷ் தேஷ்முக்கை மணமுடித்து மும்பையிலேயே செட்டிலான ஜெனிலியா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்.

இதுவரை கேஷுவல் புகைப்படங்களை மட்டுமே பதிவு செய்து வந்த ஜெனி, தற்போது ஸ்டைலிஷான போட்டோஷூட் புகைப்படங்களைப் பதிவிட்டு ஏராளமான லைக்ஸ்களை குவித்துக்கொண்டிருக்கிறார். டூவோ வடிவமைப்பாளர்களான சாந்தனு மற்றும் நிகில் ஆகியோரின் கைவண்ணத்தில் தங்க நிற காக்டெய்ல் கவுனில் மிகவும் மிடுக்கான தோற்றத்தில் புகைப்படத்திற்கு பாஸ் கொடுத்துள்ளார் ஜெனி. இந்த அழகிய கவுனை ஜெனிக்கு அணிவித்து அழகு சேர்த்தவர்கள் பிரபல டூவோ ஸ்டைலிஸ்ட் பிரணய் ஜெயிட்லீ மற்றும் ஷோனாக் அமோன்கர். இந்த கவுனின் சிறப்பம்சம் அதன் எம்ப்ராய்டரி மற்றும் அழகிய ஜர்தோசி வேலைப்பாடுகள் கொண்ட கார்செட் உள்ளது.


இந்த பளபளக்கும் கவுனுடன் காக்டெயில் மோதிரம் மற்றும் அம்ராபளி ஜூவல்லரியிலிருந்து ஆடையுடன் பொருந்தக்கூடிய மலர் காதணிகளை மேட்ச் செய்திருந்தார் ஜெனி. தன்னுடைய ஃபேஷன் சென்ஸை மேலும் மெருகேற்றும் விதமாக இந்த போட்டோஷூட் அமைந்துள்ளது. நீண்ட நாள்கள் பிறகு சமூக ஊடகங்களில் மீண்டும் வைரலாகியுள்ளது ஜெனிலியாவின் இந்தப் புகைப்படம்.


Post a Comment

0 Comments