ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், 3-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
சென்னை டெஸ்டில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 218, 40 என மொத்தமாக 258 ரன்கள் எடுத்தார். இந்திய கேப்டன் விராட் கோலி 11, 72 என மொத்தமாக 83 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 883 புள்ளிகளுடன் 3-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் ஜோ ரூட். முதலிடத்தில் உள்ள கேன் வில்லியம்சனை விட 36 புள்ளிகளும் ஸ்டீவ் ஸ்மித்தை விட 8 புள்ளிகளும் பின்தங்கியுள்ளார் ரூட். 4-ம் இடத்தில் ஆஸி. வீரர் லபுஷேன் உள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி, 852 புள்ளிகளுடன் 5-ம் இடத்துக்கு இறங்கியுள்ளார்.
டெஸ்ட் பந்துவீச்சுப் பட்டியலில் ஆண்டர்சன் 3-ம் இடத்துக்கும் அஸ்வின் 7-ம் இடத்துக்கும் முன்னேறியுள்ளார்கள். பும்ரா 8-ம் இடத்தில் உள்ளார்.
0 Comments