3-ஆம் கட்ட சுற்றுப்பயணம்- அறிவிப்பு

 உங்கள் தொகுதியில் ஸ்டாலின் ! 3-ஆம் கட்ட சுற்றுப்பயணம் அறிவிப்பு!!


வருகின்ற 12-ஆம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தின் 3-ஆம் கட்ட பயணத்தை ஸ்டாலின் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில், அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தியது. கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சந்தித்துள்ள அவலங்கள் - சரிவுகள் - தோல்விகளை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் இது தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.பின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற பிரச்சாரம் அறிவிக்கப்பட்டது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தில் மக்களிடம் விண்ணப்பம் தந்து பிரச்சனையை கேட்டு அறியப்படும் என்றும் விண்ணப்பத்தில் மக்கள் குறைகளை எழுதித் தந்தால் 100 நாள்களில் பிரச்சனை தீர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments