20 குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாம்

Follow Us

20 குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாம்

 கரூரில் உள்ள வள்ளுவன் பெட்ரோல் பங்கில் 20 திருக்குறள் சொன்னால் பொங்கல் திருநாள் ஜனவரி 15 முதல் ஏப்ரல் 31 வரை 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பெட்ரோல் பங்கில் கூட்டம் குவிந்து வருகிறது.



தமிழின் பெருமை நிலைக்க வேண்டும் என்பதற்காகவும், கற்றறிந்தவர்களுக்கு அடிக்கடி நினைவூட்டுவதற்காகவும் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள சில சான்றோர்கள் போட்டிகள் நடத்துவது போல தமிழுணர்வை ஊக்குவிப்பது சில நேரங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

அது போல கரூரை சேர்ந்த செங்குட்டுவன் எனும் எம்.காம் பட்டதாரி ஒருவர் திருக்குறள் மீதுள்ள ஆர்வத்தால் ஏற்கனவே, வள்ளுவர் உணவகம், வள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வள்ளுவர் பெட்ரோல் பிங் ஆகியவற்றை நடத்தி வருகிறாராம். இந்நிலையில், தனது பெட்ரோல் பங்கில் தமிழர் திருநாளான ஜனவரி 15 முதல் ஏப்ரில் 31 வரை போட்டி ஒன்றை நடத்துகிறார். அதாவது, 20 திருக்குறளை கூறுபவர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாம். இவரது இந்த செயலால் கரூர் - மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அவரது வள்ளுவர் பெட்ரோல் பங்கில் கூட்டம் அலைமோதுகிறதாம்.

Post a Comment

0 Comments