2 வயது குழந்தையை அடித்துக்கொன்ற தந்தை...

2 வயது குழந்தையை அடித்துக்கொன்ற தந்தை.. வெறும் 5 ரூபாய் கேட்டதால் ஆத்திரம்...




ஐந்து ரூபாய் கேட்டதால் தாய் கண்முன்னே குழந்தையை தந்தை கொலை செய்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் லொனாரா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் விவேக் உய்கே என்ற நபர் மனைவி, 2 வயது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கோதுமையில் செய்யப்படும் கஜா என்ற இனிப்பு தின்பண்டத்தைக் கேட்டு குழந்தை அழுதுள்ளது.






இதனையடுத்து குழந்தைக்கு அதனை வாங்கிக்கொடுக்க சிறுமியின் தாய் கணவன் விவேக் உய்கேவிடம் 5 ரூபாய் கேட்டிருக்கிறார். கொடுக்க மறுத்த விவேக் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட குழந்தையை தூக்கி தரையில் அடித்து விட்டான் கணவன் விவேக். தலையில் அடிப்பட்ட குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரை விட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த தாய், உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் குழந்தையை கொடூரமாக கொன்ற விவேக்கைக் கைது செய்தனர்.



திருமணத்திற்கு பிறகு விவேக் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்தும் மனைவியை அடித்துத் துன்புறுத்துவான் என்றும் கூறப்படுகிறது.



Post a Comment

0 Comments