“டான்செட்” நுழைவுத்தேர்வு –
விண்ணப்ப பதிவு தொடக்கம்!!
தமிழகத்தில் எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான “டான்செட்” தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
டான்செட் நுழைவுத்தேர்வு:
டான்செட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தான் தமிழகத்தில் எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இத்தேர்வை ஆண்டுதோறும் அண்ணா பல்கலை நடத்தி வருகிறது.
அண்ணா பல்கலை அறிவிப்பு:
எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் அண்ணா பல்கலை கழகத்தின் www.annauniv.edu என்ற இணையத்தில் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். நடப்பு ஆண்டிற்கான டான்செட் தேர்வு மார்ச் 20, 21ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
ஜே.இ.இ தேர்வு மோசடி வலைதளங்கள் – தேசிய தேர்வு முகமை எச்சரிக்கை!!
இதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 19 முதல் பிப்ரவரி 12 வரை பதிவு செய்யப்படும் என்று பல்கலை அறிவித்துள்ளது. எனவே நாளை காலை 10 மணி முதல் விண்ணப்ப பதிவு ஆரம்பிக்கிறது. பிப்ரவரி 17ம் தேதி அன்று விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் டான்செட் தேர்விற்கான நுழைவுச்சீட்டை மார்ச் 5 முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
NOTIFICATION LINK :CLICK HERE
0 Comments